தற்போதைய செய்திகள்

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தந்தி டிவி

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை பின்தொடர்ந்து துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தாளவாடி அருகே கரும்பு துண்டுகளுக்காக லாரியை, யானை துரத்திய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து இன்று காலை கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை, பண்ணாரி வனப் பகுதி அருகே சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை வழி மறித்தது. அச்சமடைந்த லாரி ஓட்டுனர், லாரியை நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து லாரியில் இருந்த கரும்புகளை காட்டு யானை தனது தும்பிக்கையால் பறித்தது. ஓட்டுநர் மெதுவாக லாரியை இயக்கி புறப்பட்டவுடன், கரும்புக்காக லாரியை துரத்தியபடி சிறிதுதூரம் சென்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்