தற்போதைய செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பின் பழங்குடி கிராமத்திற்கு மின் இணைப்பு - தந்தி டிவி செய்தி எதிரொலி

தந்தி டிவி

குன்னூர் அருகே 25 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாக, டிவிட்டரில் தந்தி டிவி செய்திக்கு மின்சார வாரியம் பதிலளித்துள்ளது. குரங்குமேடு கிராமத்தில், மின் இணைப்பு வழங்க‌க்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மின்கம்பங்கள் மட்டும் அமைக்கப்பட்ட‌து. ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்த‌து குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் இணைப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கியுள்ளது. இதுகுறித்த தந்தி டிவியின் டிவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், குரங்குமேடு கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Minister Aadhav TN Assembly Speech | "அப்போ தெரியும்.." - அரங்கை அதிரவிட்ட அமைச்சர் ஆதவ்

Minister Prabhu | EPS | தீயாய் கேள்விகளை தொடுத்த EPS - ஒரே பதிலில் முடித்த அமைச்சர் பிரபு

Minister N Anand | DMK | "பதவியேற்ற 5 நாளில்" - ஐ.பெரியசாமிக்கு குட்டிக்கதை சொன்ன அமைச்சர் ஆனந்த்

EPS | CM Vijay | "உயிர் பற்றி கவலை இல்ல.. பாட்டுதான் இப்ப முக்கியம்ல.." - பொங்கிய EPS

EPS | ADMK | ``இவங்க எப்படி மக்கள காப்பாத்த போறாங்க..’’ | வெளிநடப்பு செய்தபின் விளாசிய ஈபிஎஸ்