தற்போதைய செய்திகள்

8 மாதங்கள் கழித்து மின் கட்டணம் கணக்கீடு... உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட குண்டடம் டவுன், சங்கபாளையம், கத்தாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில், 8 மாதங்களுக்கு மேலாக மின்வாரிய அலுவலர் சக்கரவர்த்தி, மின் கட்டணம் கணக்கீடு செய்யவில்லை என்று தெரிகறது.

தற்போது, மொத்தமாக கணக்கீடு செய்துள்ளதால், மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மின் கட்டணத்தை 4 தவணைகளாக பிரித்து செலுத்த சலுகை பெற்றுத் தருவதாகவும் கூறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த குளறுபடியை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் வரை மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்