தற்போதைய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையம் விடுத்த அழைப்பு - புறக்கணித்த ஈபிஎஸ்... பங்கேற்ற ஓபிஎஸ் தரப்பு

தந்தி டிவி

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க வகை செய்யும் வகையில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்க, டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கூட்டியது. தேசியக் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். திமுக சார்பில் எம்.பி. வில்சன், அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் சுப்புரத்தினம் மற்றும் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு தரப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில், ஒபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் ஈபிஎஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்காமல் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்