தற்போதைய செய்திகள்

குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதி... சாலை மறியலில் இறங்கிய பொதுமக்கள்

தந்தி டிவி

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கபட்டது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து புகாரளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டும் அப்பகுதியினர், இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் பாதிக்கபட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு