தற்போதைய செய்திகள்

மயங்கி விழுந்தவர் பலி.. விசாரிக்கும் விதத்தில் விசாரித்த போலீஸ்.. உண்மையை கக்கிய சக நண்பர்கள்

தந்தி டிவி

சென்னை காசிமேட்டில், குடிபோதையில் மயங்கி விழுந்து உயிரிந்த சம்பவம் கொலை என தெரியவந்ததால், 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை காசிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்,

கடந்த 2 தினங்களுக்கு முன்பு, தனது 2 நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜாவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மார்பு எலும்புகள் உடைந்ததால் இறப்பு நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, இதனை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

இந்த நிலையில், ராஜாவுடன் மது அருந்திக் கொண்டிருந்த தேசிங்கு மற்றும் புவனேஷ் ஆகிய இருவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.

அப்போது, கருவாடு விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில், முன்விரோதம் காரணமாக ராஜாவை அடித்துக் கொன்றது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்