தற்போதைய செய்திகள்

மதுபோதையில் அரசுப் பேருந்தை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் - காரைக்காலில் பரபரப்பு

தந்தி டிவி

காரைக்காலில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தை, ஓட்டுநர் ராஜராஜன் அதிவேகமாக இயக்கியதால் கூச்சலிட்ட பயணிகள் நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும் நிறுத்தாமல் ஓட்டியதால், பயணிகள் அச்சமடைந்தனர். திருநள்ளாறு புறவழிச் சாலையில் செல்ல வேண்டிய பேருந்து, வளைவில் திரும்பாமல், விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. பேருந்தை நிறுத்தக்கோரி பயணிகள் சத்தம் போட்டதை கண்ட வாகன ஓட்டிகள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை இறக்கி விசாரித்தனர். அப்போது ஓட்டுநர் ராஜராஜன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை காவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்