மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் வசூலான அபராதத் தொகை குறித்து, சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும், ஆயிரத்து 628 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தாத 319 பேரின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.