தற்போதைய செய்திகள்

காரில் ஆபத்தான முறையில் பயணம் - இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்கள்

தந்தி டிவி

மதுரை தெப்பக்குளம் பகுதியில், காரில் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணிக்கும் இளைஞர்களின் வீடியோ, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளம் பகுதியிலிருந்து விரகனூர் ரிங் ரோடு வரை புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும்போது சில இளைஞர்கள், காரின் டேஸ் போர்டு மற்றும் ஜன்னல்களின் மீது அமர்ந்து, இருசக்கர வாகனங்கள் புடை சூழ பயணித்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ ட்ரெண்டாகி வரும் நிலையில், அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nepal Govt | Flood | Disaster | கனத்த மனதுடன் அறிவித்த நேபாள அரசு

Namakkal | TN Police | பஸ்-டூவீலர் மோதி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் பலி

CM Vijay | TN Govt | பறிபோன உயிர்கள்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Chennai Rain | சென்னையில் திடீர் கனமழை... குளிர்ந்த தலைநகர்

Tirupati Laddu Viral Video | "லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்" - தீயாய் பரவிய வீடியோ