தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?... பிரதமர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தந்தி டிவி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 3ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியதை தொடர்ந்து, தெலங்கானா உள்ளிட்ட நான்கு மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டனர். இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மீண்டும் அமைச்சரவை கூட உள்ளது. இந்நிலையில், வேளாண்மை, விமான போக்குவரத்து, நீர்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பர்ஃபாமன்ஸ் சரியில்லாதவர்கள், சர்ச்சைகளில் சிக்கியவர்கள் என 12 அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் எனவும், இணை அமைச்சர்களில் சிலர் அமைச்சராகவும் ஆகலாம் எனவும் பேசப்படுகிறது. மேலும், கேரளாவில் வலுப்பெறும் நோக்கில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, 'மெட்ரோ மேன்' என அழைக்கப்படும் என ஈ ஸ்ரீதரன் போன்றோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை