தற்போதைய செய்திகள்

திமுக இளைஞரணியில் அதிரடி மாற்றம்.. அமைச்சர் உதயநிதி நடவடிக்கை .. | DMK

தந்தி டிவி

திமுகவின் இளைஞர் அணியில், 9 மண்டல பொறுப்பாளர்களை நியமித்து இளைஞரணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞரணி பணிகளைத் திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் கட்சியின் தலைவர் ஒப்புதல் பெற்று இந்த நடவடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவில் மொத்தம் உள்ள 72 மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலங்கள் உள்ளடக்கி 9 மண்டலமாக பிரித்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு, வடகிழக்கு, மேற்கு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு திமுக இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் பொறுப்பாளராக நியமனம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அப்துல் மாலிக் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்