தற்போதைய செய்திகள்

வரதட்சணையாக கப்பல் வேலை வாங்கி தந்தும் தீராத பேராசை.. கருவை கலைக்க மிரட்டல் - உடைந்த கையுடன் கதறும் காதல் மனைவி

தந்தி டிவி
• வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்ததாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உடைந்த கையுடன் பெண் புகார் அளித்துள்ளார்... • சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் பிரவீன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். • இதனிடையே புவனேஸ்வரியின் பெற்றோர் 40 சவரன் நகை, வீட்டிற்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து, பிரவீனுக்கு கப்பலில் வேலையும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. • இந்நிலையில் 100 சவரன் நகை, கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டும், கர்ப்பமாக இருந்தபோது கருவை கலைக்க சொல்லியும், கணவன், மாமியார் மற்றும் மாமனார் சித்திரவதை செய்வதாக புவனேஸ்வரி புகார் தெரிவித்த நிலையில், போலீசார் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். • இதனிடையே, பிரவீன் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, புவனேஸ்வரி தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்