தற்போதைய செய்திகள்

அக்கா என்ன விட்டுட்டு எங்கேயும் போகாத..!! திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு கிளம்பிய பெண் - புடவை முந்தானையை பிடித்து.. பாச போராட்டம் நடத்திய நாய்

தந்தி டிவி

திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்குச் சென்ற பெண்.. பாசப் போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன் இவரது மகள் சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு புறப்பட தயாரானார் சுகப்பிரியா.

இதைப் பார்த்த நாய் மணப்பெண் சுகப்பிரியாவின் புடவையை பிடித்து கொண்டு அவரை போக விடாமல் தடுத்தது.

பின், தன் செல்ல நாயை சமாதானம் செய்து விட்டு, பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்துடன் சென்றார் மணப்பெண் சுகப்பிரியா. 

நீண்ட நேரம் பாசப் போராட்டம் நடத்திய இந்த செல்ல பிராணியை கண்ட திருமணத்துக்கு வந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்