தற்போதைய செய்திகள்

"உயிரையே வைத்து வளர்த்த நாய்" - தன்னைவிட்டு பிரிந்த சோகம் - உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆசையாக வளர்த்து வந்த நாய் உயிரிழந்ததால், அதற்கு இரங்கல் தெரிவித்து நாயின் உரிமையாளர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

குருப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். டீக்கடை உரிமையாளரான இவர் வீடு மற்றும் கடைக்கு பாதுகாப்பாக "கருப்பா" என்ற நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கருப்பா காணாமல் போனது... இதுகுறித்து விஜயராஜ் கருப்பாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி தேடி வந்தார். இதற்கிடையே பவானி ஆற்றுப்பகுதியில் கருப்பா இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கருப்பாவை கண்ணீருடன் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்த விஜயராஜ், பவானி முழுவதும் அதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்