தற்போதைய செய்திகள்

வேலை வேணுமா.நான் பெரிய ஆபீசரு.டெய்லி ரூ3000 வாங்கி தரேன் 4 பேரிடம் 1.5 லட்சத்த ஆட்டைய போட்ட கில்லாடி

தந்தி டிவி

நீலகிரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரிவதாக கூறி, சுமார் ஒன்றரை லட்சம் மோசடி செய்தவரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் எப்பநாடு பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர், வாடகைக்கு சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், தான் அரசு பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் துறையில் அதிகாரியாக இருப்பதாகவும், பல்வேறு பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டியை எடுத்து செல்ல வேண்டுமென கூறியுள்ளார். இதற்காக ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் வாங்கி தருவதாகவும் கூறிய அந்த நபர், தாலுகா அலுவலகத்தில் முன்பணம் கட்ட வேண்டுமென கூறி 26 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட மேத்யூஸ் என்பவரையும், அவருக்கு உதவியாக இருந்த சாதிக் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 4 பேரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்