தற்போதைய செய்திகள்

அன்று மோடி செய்ததை இன்று செய்து காட்டிய 'டி.கே.எஸ்.' - ஒரே செயல் ஓட்டுமொத்த கவனம் ஈர்த்த சிவகுமார்

தந்தி டிவி

கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றதை தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். தேர்தலில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்த டி.கே. சிவகுமாருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பை வழங்கினர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த டி.கே. சிவகுமார், தனது செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சட்டப்பேரவை முன்பாக படியில் தரையில்பட விழுந்து கும்பிட்டு பேரவைக்கு சென்றார். 2014-ல் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போது, நாடாளுமன்றத்தை கும்பிட்டு உள்ளே சென்றார். அதேபோன்று சட்டப்பேரவையை கும்பிட்டுவிட்டு, வெற்றி முத்திரையை காட்டியவாறு பேரவைக்குள் சிவகுமார் சென்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..