தற்போதைய செய்திகள்

தீபாவளி பயணம் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

சென்னையில் பணிபுரியும் வெளி மாவட்ட மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்படுவார்கள்.  இதனை முன்னிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல குறைந்த பட்சம் ஆயிரத்து 899ல் இருந்து  அதிகபட்சம் 2 ஆயிரத்து 938 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ஆயிரத்து 699 முதல் 2 ஆயிரத்து150 வரை வசூலிக்கப்படுகிறது.  சென்னையில் இருந்து திருச்சி செல்ல, ஆயிரத்து 799 முதல் 3 ஆயிரத்து 400 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்ல ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 999 வரை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்