தற்போதைய செய்திகள்

மழையை விட தீபாவளி முக்கியம் - துணிக்கடைகளை ஸ்தம்பிக்க வைத்த மக்கள்

தந்தி டிவி

மழையை விட தீபாவளி முக்கியம் - துணிக்கடைகளை ஸ்தம்பிக்க வைத்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையிலுள்ள துணிக்கடைகளில், பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் மட்டுமே இருப்பதால், பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையிலுள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மழையினையும் பொருட்படுத்தாமல் மக்கள் குவிந்ததால் எம்.சி சாலையிலுள்ள துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.பெரிய கடைகளுக்கு இணையாக சாலையோர துணி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. மக்கள் அதிகளவில் குவிந்ததால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். எம்.சி சாலை பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், துணிகளை தோளில் சுமந்தவாறு விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்