தற்போதைய செய்திகள்

போலீசாருக்கு இனிப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் - தீபாவளி வாழ்த்து தெரிவித்த அதிகாரி

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத், குடும்பத்துடன் சேர்ந்து இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளியை ஒட்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் விதமாக கன்னியாகுமரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாகர்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் குடும்பத்துடன் வந்து, இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்த துப்புரவு பணியாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் இனிப்புகளை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்