விக்கிரவாண்டி சுங்கசாவடியில், முதலில் செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள், சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் விக்கிரவாண்டி சுங்க சாவடியில், யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக கார்களில் வந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த போக்குவரத்து போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.