தற்போதைய செய்திகள்

"திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டி அடிங்க..." - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

தந்தி டிவி
• திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டியடித்து, ராமர் மற்றும் அனுமன் வாரிசுகளுக்கு வாக்காளிக்க வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. • சர்ச்சைக்கு பேர்போன கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார், கொப்பால் மாவட்டம் எலபுர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். • அப்போது, தங்களை ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் என்றும், திப்புவின் ஆதரவாளர்கள் இல்லை என்றும் கூறினார். • சட்டப்பேரவைத் தேர்தலில் திப்பு ஆதரவாளர்களை விரட்டியடிக்க வேண்டும் என்ற அவர், திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமா? ராமர் மற்றும் ஹனுமனின் பக்தர்கள் வேண்டுமா? என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். • திப்புவின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக்கூடாது என்றும், ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நளின் குமார் தெரிவித்தார். அவரது பேச்சு மத வெறுப்பை தூண்டும் வகையுல் உள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்