திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆதிபுரூஷ் பட இயக்குநர், கோயில் எதிரிலேயே கதாநாயகிக்கு கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். ஆதி புருஷன் கதாநாயகி கிருத்தி சனன், இயக்குனர் ஓம் ரவத் மற்றும் படக்குழுவினர் ஏழுமலையானை இணைந்து தரிசித்தனர். தொடர்ந்து ஓம் ரவத் வழியனுப்ப சென்ற போது, கிருத்தி சனனுக்குக் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.