தற்போதைய செய்திகள்

அதிகாரி போட்ட பக்கா பிளான் -கையும் களவுமாய் சிக்கிய நபர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் யோகேஷ். இவரது தலைமையிலான கும்பல், போடி வனப் பகுதியில் இருந்து கருங்காலி மரக்கட்டைகளை வெட்டி கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த சென்னை வனத்துறை மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், கருங்காலி கட்டைகளை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் போல் யோகேஷை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சந்திரன் என்பவரது வீட்டில் கருங்காலி கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சந்திரனின் பங்களாவிற்கு சென்ற அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கருங்காலி கட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, யோகேஷ் மற்றும் சந்திரனின் கார் ஓட்டுநர் சிவாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பங்களாவில் இருந்து பழமையான கோவில் கலசங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்