தற்போதைய செய்திகள்

உயிரை பறித்த கணவனின் விளையாட்டு.. திடீரென தடுமாறி நீரில் விழுந்ததால் விபரீதம் - திண்டுக்கல்லில் கோர சம்பவம்

தந்தி டிவி
• திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே மனைவியை மிரட்டுவதற்காக குவாரி தண்ணீரில் குதிப்பது போல் நடித்த கணவர், கால் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த மகாலட்சுமியும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமீரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். • இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஊருக்கு வெளியே உள்ள குவாரிக்கு துணி துவைக்க சென்றபோது, இருவருக்கும் இடைய சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. • அப்போது, தண்ணீருக்குள் குதிக்கப் போவதாக விளையாட்டாக மிரட்டிய அமீர், திடீரென கால் தடுமாறி தண்ணீருக்குள் தவறி விழுந்தார். • கணவர் விளையாட்டாக செய்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த மகாலட்சுமி, கணவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் கூச்சலிட்டுள்ளார். • அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். • சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி, கொடியில் சிக்கி உயிரற்ற நிலையில் இருந்த அமீரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை