தற்போதைய செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம்... இளைஞரின் கழுத்தில் கத்தியால் குத்திய கும்பல் - ரத்தம் வடிய வடிய தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்

தந்தி டிவி
• வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குங்கும காளியம்மன் கோயில் தெருவில், அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. • இந்த மதுபான கடையில் உள்ள பாரில், கஸ்பா ராஜா, சதாம் உசேன் மற்றும் அவர்களின் நண்பர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். • அப்போது, மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. • இதில், கஸ்பா ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சதாம் உசேனின் கழுத்தில் குத்திவிட்டு, அவரும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். • தகவலின் பேரின் பேரில் வந்த போலீசார், பலத்த காயம் அடைந்து ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த சதாம் உசேனை, 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். • ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சதாம் உசேன், தன்னை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யும் வரை இடத்தை விட்டு நகரப் போவதில்லை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • பின்னர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்