தற்போதைய செய்திகள்

சென்னையில் பலியான அஜித் ரசிகர் கடைசியாக போட்ட Insta ஸ்டேட்டஸ்.. சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

தந்தி டிவி

லாரி மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர், லாரியிலிருந்து கீழே குதித்தபோது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித், விஜய் திரைப்படம் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்திருந்த ரசிகர்கள் அப்பகுதியில் லாரியின் மீது ஏறி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது,

சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர், லாரியிலிருந்து கீழே குதித்ததில் அவரது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://youtu.be/Ogmxde9tJfAஎனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படம் காண வந்த ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Delimitation Rahulgandhi Speech | ``எனக்கும் பிரதமர் மோடிக்கும் `மனைவி’ பிரச்சனை கிடையாது’’ - ராகுல்

Rahul Gandhi | ராகுல் சொன்ன மேஜிக்காரன் கதை.. சட்டென்று சிரித்த பிரியங்கா காந்தி

Rahul Gandhi | "இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றுவதற்கான முயற்சி" - கொந்தளித்த ராகுல் காந்தி

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்