தற்போதைய செய்திகள்

பெற்ற மகனை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய பெற்றோர்.. ரத்தம் சொட்ட சொட்ட மனு அளித்த மகன் - மனதை உலுக்கும் கொடூர காட்சிகள்

தந்தி டிவி

சொத்து தகராறால் தன்னை ஓட ஓட விரட்டி வெட்டிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் ​மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் பிரகாஷின் பெற்றோருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை சொத்து தகராறு வரை நீண்டிருக்கிறது. சம்பவத்தன்று பிரகாஷ் தன் வீட்டின் அருகே இருந்த போது அவரின் பெற்றோர் தன்னை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை ஆதாரமாக வைத்து பிரகாஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்