தற்போதைய செய்திகள்

அண்ணனுக்கு கடன் வாங்கி கொடுத்த தங்கை.. திடீரென விஷம் குடித்த தங்கையின் கணவர் - தருமபுரியில் பரபரப்பு

தந்தி டிவி
• தருமபுரி மாவட்டத்தில் அண்ணனுக்கு தங்கை கடன் வாங்கி கொடுத்த நிலையில், கடனை அண்ணன் சரியாக கட்டாததாலும், கடன் கொடுத்தவர்களின் தொல்லையாலும் தங்கையின் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. • அரூர் அடுத்த வெள்ளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். • இவர் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது தங்கை புஷ்பா மூலம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், ரவிச்சந்திரன் கடனை முறையாக கட்டாததால், கடன் கொடுத்தவர்கள் புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் நெருக்கடி கொடுத்துள்ளனர். • இதனால், பல முறை ரவிச்சந்திரனிடம் கொடுத்த பணத்தை கேட்டும், அவர் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. • இதனால், தங்கையின் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறதென்றும், பணத்தை திருப்பி செலுத்தகோரி வற்புறுத்திய தாயை ரவிச்சந்தரன் தரக்குறைவாக பேசிய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் புஷ்பாவின் கணவர் மூவேந்தன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்