தற்போதைய செய்திகள்

தேவர் ஜெயந்தியில் போஸ்டர் கிழிப்பால் விசிக பிரமுகர் கொலையா?

தந்தி டிவி

தூத்துக்குடியில் வீடு புகுந்து விசிக பிரமுகரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்த மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் மாரிமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றனர். தடுக்க முயன்ற மாரிமுத்து மகன் கருணாகரனையும் தாக்கிவிட்டு சென்றனர். காயமடைந்த கருணாகரனை தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதித்து, தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட போஸ்டரை, மாரிமுத்துவின் மகன் கருணாகரன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்பகையால், மாரிமுத்துவை அதே பகுதியை சேர்ந்த முகேஷ், முத்துபாண்டி, முத்துலிங்கம் ஆகியோர் வீட்டிற்கே சென்று வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்