தேவர் குருபூஜை விழா - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நாளை நடைபெற உள்ளது. குருபூஜை விழா நேற்று தொடங்கிய நிலையில், கமுதி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன் கேமரா, மொபைல் சிசிடிவி, கண்காணிப்பு கோபுரம் கொண்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பசும்பொன், கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காலை அரசு சார்பில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இயலாததால், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார். பல்வேறு கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.