தற்போதைய செய்திகள்

"கேஜிஎப் ராக்கி" போல ஆக ஆசை-19 வயது சிறுவன் சீரியல் கில்லராக மாறிய கொடூரம்

தந்தி டிவி

சாகர் மாவட்டத்தில், கடந்த 5 நாட்களில் மட்டும்இரவுக் காவலாளிகள் 4 பேர், கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வியாழக்கிழமை அன்று, போபால் நகரில் நடந்த 4வது கொலையில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, கொலையாளியை பின் தொடர்ந்த போலீசார், அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 19 வயதான ஷிவ்பிரசாத் துருவ் என தெரியவந்தது.

காவலாளிகளைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்த அந்த இளைஞர், கேஜிஎப் படத்தில் ராக்கி ஸ்டார் போன்று பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், கொலைகளை செய்ததாக அலட்சியமாக கூறியது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து ஷிவ்பிரசாத் துருவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்