டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் பரிசுப் பொருட்களை பெற்று ஆதாயம் அடைந்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைந்திருந்தது.
இந்நிலையில் ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது.
கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர்.
ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை.
இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.