தற்போதைய செய்திகள்

ஹோம் லோன் செலுத்த தாமதம்..வங்கி ஊழியர்கள் அராஜக செயல்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூர் காலனியை சேர்ந்த 75 வயதான கந்தசாமி தனது பேரன்

தினேஷ் குமார் தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாதம்தோறும் சரியாக தவணைத்தொகை செலுத்தி வந்த கந்தசாமி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் பத்தாம் தேதி கட்ட வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் தவணைத்தொகையை செலுத்த காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கந்தசாமி வீட்டிற்கு சென்ற தனியார் வங்கி ஊழியர்களான தினேஷ் மற்றும் மணி ஆகியோர் வீட்டில் உள்ள டிவி இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்து வெளியே வைத்து வீட்டை பூட்ட முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்கள் அராஜக செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த போலீசார் வங்கி ஊழியர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

ஹோம் லோன் செலுத்த தாமதம்..வங்கி ஊழியர்கள் அராஜக செயல்ஹோம் லோன் செலுத்த தாமதம்..வங்கி ஊழியர்கள் அராஜக செயல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்