தற்போதைய செய்திகள்

தோண்ட தோண்ட ஆபாச வீடியோக்கள்.. டெலிகிராம் குரூப்பில் சிக்கிய IT ஊழியர்கள் - அந்த மாதிரி குரூப்பில் இருப்பவர்களுக்கு Final வார்னிங்..!

தந்தி டிவி

ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த பி.டெக் ஐடி பட்டப்படிப்பு பயின்ற ஆர்யா மற்றும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஐடி ஊழியர் தமிழ்மாறன் ஆகிய இருவரை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வணிக வளாகம், பல்பொருள் அங்காடி உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து, zip ஃபைல் மூலம் டெலிகிராமில் பதிவிட்டு, பணத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவ்வாறு பெறக்கூடிய பணத்தில், சில நிறுவனங்களில் கிஃப்ட் வவுச்சர்களாக மாற்றி, ஆபாச புகைப்படங்களை உருவாக்கி தரும் நபர்களுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. தமிழ்மாறன், சினிமா பாணியில், ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களோடு நட்பாக பழகி புகைப்படம் எடுத்துக் கொண்டு, அந்த பெண்களின் போட்டோக்களை பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்ட்டா FAKE ஐடி-களை உருவாக்கியது தெரியவந்தது. புகைப்படம் எடுத்து அனுப்பும் நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு