தற்போதைய செய்திகள்

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் - இரண்டு பேரை கைது செய்த போலீஸ் | Rahul Gandhi

தந்தி டிவி

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடை பயணத்தின் போது இந்துத்துவா கொள்கை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றச்சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக, சிவசேனா, நவநிர்மான், சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கும் பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கடிதத்தில் ராகுல் காந்தி, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்