தற்போதைய செய்திகள்

🔴LIVE : தமிழகத்தை உலுக்கிய வீராங்கனை மரணம்...ப்ரியாவின் இறுதி பயணம் | நேரலை காட்சிகள்

தந்தி டிவி

கொளத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு, கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு அவருக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் வலது காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரியாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

பிரியாவின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினர்கள் கதறி அழுதது, உருக்கத்தை ஏற்படுத்தியது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடற்கூராய்வு நிறைவு...

பிரியா உடலை எடுத்துச்செல்லும் அமரர் ஊர்தி முன்பு உறவினர்கள், நண்பர்கள் தர்ணா...

மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தல்...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை