தற்போதைய செய்திகள்

உயிரோடு இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிழ்... பேரதிர்ச்சி கொடுத்த உறவினர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் 17 வயதான கோபி. இவரது தாய் பூங்காவனம் கடந்த மாதம் இறந்துவிட்ட நிலையில், தந்தை கார்த்திகேயன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில், குடும்ப அட்டையில் அவரது பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கோபி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பூர்வீக சொத்து மீது, இறக்கும் முன்பு தனது தாய் பூங்காவனம் வழக்கு தொடர்ந்திருந்த‌தால், அந்த சொத்தை அபகரிப்பதற்காக, அண்ணன் ஹரிகரனும், பாட்டி சின்னபொண்ணு, பெரியம்மா பரமேஸ்வரி ஆகியோர் போலி இறப்பு சான்றிதழ் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தனது உறவினர்கள், போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலர் மீது, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோபி புகார் அளித்துள்ளார். சொத்துக்காக 17 வயது சிறுவன் இறந்துவிட்டதாக அவரது அண்ணன் உள்ளிட்ட உறவினர்களே இறப்பு சான்றிதழ் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்