தற்போதைய செய்திகள்

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு.. சரண்டரான கணவன் | Kovai

தந்தி டிவி

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணாமாக கன்னியப்பனை அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டில் வசித்து வந்த மனைவியை பல முறை கன்னியப்பன் அழைத்தும் வராததால் ஆத்திரத்தில் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், கன்னியப்பனின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, காவல்நிலையத்தில் சரணடைந்த கன்னியப்பன் மீது வழக்குபதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்