தற்போதைய செய்திகள்

"ஸ்டேஷன்ல தான இருக்காருனு நினைச்சேன்.. எப்போ செத்தாருனே தெரியலயே.." - மாரில் அடித்து அழும் மனைவி

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சிறையில் இருந்த கைதி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திட்டச்சேரி அடுத்துள்ள பனங்காட்டூரை சேர்ந்த சிவசுப்பிரமணியனுக்கும் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் சிவசுப்பிரமணியனை திட்டச்சேரி போலீசார் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த சிவசுப்பிரமணியனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அவரை கடந்த 10ஆம் தேதி நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறைக் காவலர்கள் சேர்த்துள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு சிவசுப்பிரமணியன் திடீரென உயிரிழந்ததாக உறவினர்களுக்கு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சிறைக்கைதி சிவசுப்பிரமணியன் உயிரிழந்தது தொடர்பாக நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சன்மிஹா நேரில் விசாரணை நடத்தினார். இதனிடையே சிவசுப்பிரமணியன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினரும், உறவிர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு