தற்போதைய செய்திகள்

கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி போய் திருடிய பாஜக நிர்வாகி - சிக்க வைத்த சிசிடிவி

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, பாஜக நிர்வாகியை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். • திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. • இதையடுத்து, சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி அறிவழகன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், திருக்கோவில் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரரின் வீடு மற்றும் பல வீடுகளில் கைவரிசை காட்டி இருந்ததும் அம்பலமானது. • இதையடுத்து, அறிவழகனிடம் இருந்து இரு சக்கர வாகனம், மூன்றரை சவரன் தங்க நகைகள் என இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்