தற்போதைய செய்திகள்

இளைஞரை வாட்டிய வயிற்று வலி.. திருமணமான 3 மாதத்தில் பலி

தந்தி டிவி
• கடலூரில் திருமணமான மூன்றே மாதத்தில் குடலிறக்க சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் உதயகுமார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. • இதற்கான மருத்துவ பரிசோதனையின் போது உதயகுமாருக்கு குடலிறக்க பிரச்னை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். • இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை பின்பு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உதயகுமார், திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்நிலையில், இளைஞர் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்