தற்போதைய செய்திகள்

Farzi தொடரை மிஞ்சும் அளவில் கள்ள நோட்டு கடத்தல்..மடக்கி பிடித்த போலீஸ்

தந்தி டிவி

திருச்சி மணப்பாறை அருகே சுமார் 84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், சொகுசு காரில் வந்த கும்பல் போலீசாரை கண்டு ஓட்டம்பிடித்தது. இந்நிலையில், அவர்களை துரத்திச் சென்ற போலீசார், கோவையை சேர்ந்த பார்த்த சாரதி, சதீஷ் சுந்தர் மற்றும் தங்கவேல் ஆகிய மூவரை கைது செய்தனர். தொடர்ந்து, மூவரிடம் இருந்து சுமார் 84 லட்சம் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்