தற்போதைய செய்திகள்

மின்கோபுர உச்சியில் நின்று மிரட்டல்.. தரையில் பொத்தென விழுந்த முன்னாள் கவுன்சிலர்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுவித்த முன்னாள் கவுன்சிலரை மீட்ட போலீசார், வெயிலில் பசியால் மயங்கிய அவருக்கு உணவளித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

ஒசூர் அருகே காடு உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் போடிச்சிப்பள்ளி கிராமத்தின் முன்னாள் கவுன்சிலரான நிலையில், இவருக்கும் அஞ்செட்டி துர்கம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவருக்குமிடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகாரளித்த நிலையில், ரவியின் மகனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த ரவி, தேன்கனிகோட்டையின் உள்ள உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழறக்கிய நிலையில், வெயிலில் பசியால் மயங்கிய அவருக்கு உணவளித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

-

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்