தற்போதைய செய்திகள்

மீண்டும் மிரட்ட வரும் கொரோனா - இன்று முக்கிய ஆலோசனை

தந்தி டிவி

வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சீனாவில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் காலை 11 மணியளவில் ஆலோசனை நடக்க உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்