தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து - நீடிக்கும் சிக்கல் | coromandel express accident

தந்தி டிவி

ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதால், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில், கடந்த 2ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இவற்றில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன. ஒரே உடல்களை பலர் உரிமை கோருவது, அடையாளம் காண முடியாத அளவுக்கு சில உடல்கள் சிதைந்துள்ளது போன்ற நடைமுறை சிக்கல் இருந்து வருகிறது. இதனால் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, இதுவரை 193 உடல்களில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஒடிசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்