தற்போதைய செய்திகள்

பைக்கில் சென்ற சிறுவனை லத்தியால் கொடூரமாக தாக்கிய காவலர்கள் - பட்டப்பகலில் திருச்சியில் அரங்கேறிய கொடூரம்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பனை அழைத்து வருவதற்காக, இரு சக்கர வாகனத்தில் சமயபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது சமயபுரம் அருகே, சந்தேகத்தின் பேரில் சிறுவனிடம் விசாரணை நடத்திய 3 காவலர்கள், சிறுவனை தகாத வார்த்தைகளால் பேசி, செயின் பறிக்க வந்தாயா? என கேட்டு வசைபாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து லத்தியால் சிறுவனை பின்புறம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தபோது, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததாக, சிறுவனின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்