தற்போதைய செய்திகள்

குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்.. சிக்கிய ஷாரிக்கின் முக்கிய டைரி..தமிழகம் விரைந்த கர்நாடக போலீசார்

தந்தி டிவி

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, மதுரையில் பல்வேறு இடங்களில் கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் கடந்த 19-ந் தேதி நடந்த குண்டு வெடிப்பில், சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு டைரி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு ஷாரிக் வந்து சென்ற விவரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மங்களூர் சிறப்பு போலீசார், மதுரையில் ஷாரிக் தங்கியதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளான, மதுரை டவுண் ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தங்கு விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். தங்கு விடுதிகளில் உள்ள வருகைப் பதிவேடுகளை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்