தற்போதைய செய்திகள்

தீயாய் பரவிய சர்ச்சை... முற்றுப்புள்ளி வைத்த நடிகை

தந்தி டிவி

பிரபல நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் சர்மாவை காதலித்து 2016ஆம் ஆண்டு மணமுடித்தார். நீண்ட நாட்களாக திரையுலகை விட்டு அசின் ஒதுங்கியுள்ள சூழலில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருந்த புகைப்படங்களை அசின் நீக்கியதாகவும், விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அசின், கோடை விடுமுறையில் மகிழ்ச்சியாக இருந்த போது, ஆதாரமில்லாத இந்த செய்திகளை பார்த்தவுடன், நாங்கள் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்த போது, இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்தி நினைவில் வந்ததாக சுட்டிக்காட்டினார். இதைவிட சிறப்பாக செய்யுங்கள் என கடிந்துக்கொண்ட அசின், அற்புதமான விடுமுறையில் ஐந்து நிமிடத்தை வீணடித்ததற்கு வருந்துவதாக பதிவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்