தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் 2 தொகுதிகள்...சஸ்பென்ஸ் வைத்த பாஜக |

தந்தி டிவி

பாஜக சார்பில் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் கேட்ட ஹூப்ளி தன்வார்ட் தொகுதி மகேஷ் தெண்ணிகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவலிக்கு பதிலாக அவரது மனைவி மஞ்சுளாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பாவின் ஷிமோகா தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பாஜக சார்பாக இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்க வேண்டியுள்ளது. ஷிமோகா நகரம் மற்றும் கே.ஆர். புரம் தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்