தற்போதைய செய்திகள்

"காங்கிரஸின் அடுத்த இலக்கு இந்த மாநிலம் தான் ..." - சத்தீஸ்கர் முதலமைச்சர் சொன்ன அதிரடி தகவல்

தந்தி டிவி

4 ஆண்டுகளில் முதல் வெற்றியை ருசித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஹிமாச்சலில் ஆட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில், ஹிமாச்சல் தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், தேர்தல் வெற்றிக்கு பிறகு சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு திரும்பினார்.

ராய்ப்பூர் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநிலத்தின் பத்து திட்டங்கள் ஹிமாச்சலில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருப்பதும், தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணம் என குறிப்பிட்டார்.

தற்போது மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று அவர் சூளுரைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்